இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 2024ம் ஆண்டு உலகக்கோப்பை டி20க்கு தகுதி பெற்ற 12 அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டும் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் இரண்டு பிரிவாக போட்டியிட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளதால் மீண்டும் டி20 உலகக்கோப்பை 2024ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்காக தகுதி பெற்றுள்ள அணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி போட்டிகள் நடைபெற உள்ள அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இந்த ஆண்டு போட்டியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளும் 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறுகின்றன. அதன்படி இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதுதவிர ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இந்த 12 அணிகள் நேரடி தகுதி பெற்றுள்ள நிலையில் தகுதி சுற்றில் மேலும் சில அணிகள் தேர்வாகும் என கூறப்பட்டுள்ளது.