இனி இந்திய அணிக்கு, 3 கேப்டன்களை நியமிக்க இருப்பதாக, பிசிசிஐ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்துடன் மோதிய இந்திய அணி, மிகவும் கடுமையான தோல்வியை அடைந்தது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
இந்த மனக்கசப்பைத் தொடர்ந்து விராட் கோலி, தனது கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. மேலும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது பிசிசிஐ, ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது, இனி ஒரு நாள் போட்டிகளுக்கும், 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாகவும் தொடர்வார்கள் என அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹ்ரித்திக் பாண்டியா கேப்டனாக தொடரலாம் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.