உலகக்கோப்பை அரையிறுதியை நேற்று போல் இன்றும் மழை குறுக்கிட்டால் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடுமாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. நேற்றைய அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிடுக்கும் போது மழை குறுக்கிட்டது.
சில மணி நேரம் காத்திருந்தும் மழை ஓய்வதாய் தெரியவில்லை. எனவே, அரையிறுதி போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே எனப்பட்டு இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று போட்டி 3 மணி அளவில் 46.2 வது ஓவரில் இருந்து துவங்கும்.
ஆனால் இன்றும் மான்செஸ்டரில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவே வானிலை அறிக்கை கூறுகின்றது. எனவே, இன்றும் மழை குறுக்கிட்டால் இந்தியாவுக்கு 20 ஓவர்களில் எடுக்க வேண்டிய ரன்கள் குறித்த இலக்கு அளிக்கப்படும்.
இதைதவிர்த்து விளையாட முடியாத அளவிற்கு மழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அப்படி போட்டி ரத்து செய்யப்படும் பட்சத்தில் லீக் சுற்றுகளில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
அதாவது, லீக் போட்டிகளில் நியூசிலாந்தைவிட அதிக புள்ளிகளை பெற்றிருக்கும் இந்திய அணி உலகக்கோப்பை 2019 இறுதிப்போட்டிக்குள் தானாகவே நுழைந்துவிடும்.