இதுகுறித்து, தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், 99 பணியிடங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 70 இடங்கள் எஸ்.சி, எஸ்.டி, பிரிவனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு 123, பொதுப்பிரிவினருக்கு 144, பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியருக்கு 16, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 93 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.மே 3ம் வாரம் விண்ணபிக்க இறுதி வாய்ப்பாகும். ஜுன் 4ம் வாரத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.
21 வயது முதல் 35 வயதுள்ள எஸ்சி, எஸ்சி, பிசி, எம்பிசி இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் ஆவர். பொதுப்பிரிவினர் 21 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரூ. 16,600-52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். இது குறித்த கூடுதல்விவரங்களை www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.