வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் "பெய்ட்டி" புயலாக உருவாகி உள்ள நிலையில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து தமிழகம், ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா நோக்கி புயல் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மெரினாவில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது .