ரக்ஷா பந்தன் பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றது. இந்த பண்டிகை மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படுகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகை சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இடையே சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில் ரக்ஷா பக்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் ஆகஸ்ட் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சகோதரர்கள் கையில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.
சகோதரர்கள் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர்.
இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு நெருக்கமானவர்களைச் சகோதரர்களாக நினைத்து ராக்கியை கையில் கட்டியும், பரிசுகளை பெற்றும் மகிழ்வர். இதோடு ராக்கியைக் கையில் கட்டிய பெண்ணின் வாழ்க்கையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் பக்க பலமாக நிற்பேன் என சகோதர்கள் உறுதி அளிப்பார்கள்.