ஃபிபா உலகக்கோப்பை காலபந்து போட்டியின் அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து- குரோஷியா அணிகள் இன்று மோதவுள்ளன.
ரஷியாவில் நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கால்இறுதி சுற்றில் இங்கிலாந்து, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து, நேற்று நடைபெற்ற முதல் அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு நடக்கவுள்ளது.
இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணி 1966ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. குரேஷியா அணி 1998ம் ஆண்டிற்கு பிறகு அரைஇறிதிக்குள் நுழைந்துள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.