முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை இந்த வருடத்தில் அமல்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியாக ஏர்டெல் இப்போதே போட்டிக்கு தயாராகி வருகிறது.
ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் சேவையில் ஜியோவை வீழ்த்த குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் சந்தா கொண்ட பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
இதில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூடுதல் டேட்டா ஆஃபர்களை பெங்களுரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வழங்கவுள்ளது.
பெங்களுருவில் ரூ.999-க்கு அதிகபட்சமாக 750 ஜிபி டேட்டாவும், டெல்லியில் ரூ.799-க்கு அதிகபட்சமாக 500 ஜிபி டேட்டாவும், ரூ.849-க்கு 1,000 ஜிபி டேட்டாவும், மும்பையில் ரூ.1,999-க்கு அன்லிமிடேட் டேட்டா வழங்கப்படவுள்ளது.
இதுநாள் வரை மொபைல் போன்களில் டேட்டா வழங்கி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை கலங்கடித்து வந்த ஜியோ இப்போது பிராட்பேண்ட் விரைவில் இறங்கயுள்ளதால் மற்ற அனைத்து நெட்வொர்க்குகளும் கடும் போட்டியை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.