Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முஸ்லிம் மீது நம்பிக்கை இல்லை; வாடிக்கையாளருக்கு ஏர்டெல் பதிலடி!

முஸ்லிம் மீது நம்பிக்கை இல்லை; வாடிக்கையாளருக்கு ஏர்டெல் பதிலடி!
, செவ்வாய், 19 ஜூன் 2018 (14:20 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாலர்களுக்கு பல சலுகைகள் சேவைகளை வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் மீது அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பலரும் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர். 

 
ஏர்டெல் வாடிக்கையாளரான பெண் ஒருவர் டிடிஎச் மறு இணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டதாகவும் அப்போது தன்னுடன் பேசிய வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி தவறாக பேசியதாகவும் டிவிட்டர் மூலம் ஏர்டெல் நிறுவனத்திடம் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இது குறித்த அந்த பெண்ணின் பதிவுக்கு ஏர்டெல் வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருவர், இது போன்ற விஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி தனது பெயர் ஷோயப் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால், அந்த பெண்ணோ முஸ்லிம் நபரான உங்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே, ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறும் கூறியிருக்கிறார். மதத்தைக் காரணம் காட்டி வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்கச் சொன்ன வாடிக்கையாளரை ஏர்டெல் கண்டிக்கவில்லை என்று ஏர்டெல் மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். 
 
இந்நிலையில், கிட்டத்தட்ட 9 மணி நேரம் கழித்து ஏர்டெல் பதிலளித்துள்ளது. அதில், சாதி மத அடிப்படையில் ஊழியர்களையும் வாடிக்கையாளரையும்  ஒருபோதும் வேற்றுமைப்படுத்தாது. நீங்களும் சாதி மத வேற்றுமை பார்க்காமல் நடந்துகொள்வதே சரி. ஷோயிப், ககன் இருவருமே எங்கள் பிரதிநிதிகள்தான் என்று பதிலடி கொடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது நீதிபதி நியமனம் - யார் இந்த விமலா?