உலகம் முழுவதும் பிரபலமடைந்த சமூக வலைதளமாக ஃபேஸ்புக் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்துள்ளது.
சமூக வலைதளமான ஃபேஸ்புக் உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவிற்குள் நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து தற்போது இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது கலர் பலூன்ஸ் என்ற ஆப். இந்த ஆப் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் ஆப் போலவே உள்ளதால் தற்போது ஃபேஸ்புக் மீது சந்தேகம் எழுந்துள்ளது.