Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

LiFi வந்தாச்சு, இனி WiFi-க்கு பை பை!!

LiFi வந்தாச்சு, இனி WiFi-க்கு பை பை!!
, வியாழன், 23 மார்ச் 2017 (11:10 IST)
தற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய லைஃபை புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 


 
 
வைஃபை கருவியின் மூலம் பல நபர்கள் ஒரே நேரத்தில் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறையும். இந்நிலையில் நெர்தர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
 
ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபி-க்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர். 
 
ஒளிகள் மூலம் இணைய இணைப்பை பெறுவதால் இதற்கு LiFi என பெயரிட்டுள்ளனர். விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை மின்கம்பம் சின்னத்தில் ஓபிஎஸ் அணி போட்டி: அம்மா அதிமுக அணியின் பெயர்!