Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ விஷம்: கட்டாய ரிசார்ஜ் இல்லையென்றால் சேவை துண்டிக்கப்படும்

ஜியோ விஷம்: கட்டாய ரிசார்ஜ் இல்லையென்றால் சேவை துண்டிக்கப்படும்
, செவ்வாய், 28 மார்ச் 2017 (19:21 IST)
ஜியோ, தனது ப்ரைம் மற்றும் கட்டண சேவைகளில் பல கட்டளைகளை விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பின்பற்றவில்லை என்றால் சேவை துண்யிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


 

 
ஜியோ இலவச சேவை இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில் கட்டண சேவை குறித்து ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ப்ரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ப்ரைம் அல்லாது ஜியோ சேவையை தொடங்கும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
 
ப்ரைம் வாடிக்கையாளராக இணைய ரூ.99 முன்பதிவு கட்டணம் மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ப்ரைம் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தகுந்த சேவை பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் மற்றும் ஒரு மாதம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
 
இதில் உள்ள் சிக்கல் என்னவென்றால் நீங்கள் செய்த ரிசார்ஜ் வேலிடிட்டி முடிந்த பின் உடனடியாக அடுத்த ரிசார்ஜ் செய்து சேவையை தொடர வேண்டும். கால தாமதம் செய்தால் ஜியோ எண் துண்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஒரு ரிசார்ஜ் முடிந்து அடுத்த ரிசார்ஜ் செய்வதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் எண் துண்டிக்கப்படலாம். 
 
மேலும் ஒருமுறை நீங்கள் ஜியோ கட்டண சேவையை தொடங்கிவிட்டால், தொடர வேண்டும். இல்லையென்றால் உங்கள் சேவை மற்றும் எண் துண்டிக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உறவுகள் பற்றி சொல்லிக் கொடுக்க மறந்து விட்டோம் -வசந்த பாலன் கூறிய நெகிழ்ச்சி கதை