நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில் இந்தியாவிலும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. அதோடு பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மேலும், நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிகிறது. அதாவது தற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.