பாரத ஸ்டேட் வங்கியை தவிர மற்ற அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக காரணம் பின்வருமாறு...
பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாக்க வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கூறியிருக்கிறார். இதில் ஸ்டேட் பாங்க் மட்டும் விதிவிலக்காக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்பட வேண்டும் என்றால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறைய வேண்டும்.
மேலும், 2019 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் இதனை வாக்குறுதியாக வழங்குவது குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.