உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின்னர் எ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் தளர்வு செய்யப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது ஒருநாள் 10 ரூபாய் ஆயிரம் வரை ஏ.டி.எம்.யில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுபாடுகள் தளர்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதுவும் சில கட்டுபாடுகளுடன் அறிவித்துள்ளது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த கட்டுபாடும் இல்லை. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதே கட்டுபாடு நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டுபாடு தளர்வு செய்யப்பட்டுள்ளது.