ஜியோவின் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணத்தில் இருந்து ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு தப்பித்து உள்ளனர்.
தொலைத்தொடர்ப்பு துறையில் நுழைந்த ஜியோ, தினமும் ஒரு ஜிபி இலவசமாக வழங்குவதாக அறிவித்தவுடன் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மேலும் ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை சலுகைகளை வாரி வழங்கியது. அதோடு எந்த சிம்முக்கு பேசினாலும் இலவசம் என்ற அறிவிப்பு ஜியோவிற்கு பெரிய ப்ளஸ்சாக இருந்தது.
ஆனால், சமீபத்தில் ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் ஜியோ சிம் வைத்துள்ளவர்களுடன் பேசினால் மட்டுமே இனி இலவசம் என்றும், ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடோபோன் போன்ற மற்ற நெட்வொர்க் சந்தாதாரர்களுடன் பேச நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்றும் ஜியோ அறிவித்தது.
இந்நிலையில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதிலும் இலவச வாய்ஸ் கால் சேவை வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். வேலிடிட்டி முடிந்த பின்னர் ஏற்கனவே வழக்கமான ரீசார்ஜ் மற்றும் ஐயுசி டாப் அப் வவுச்சர்களை சேர்த்து வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.