இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. இந்த வசதியை மேம்படுத்தும் விதமாக மூன்று புதிய அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்டாவாசிகளுக்கு ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் புதிய பொருட்களை கண்டறிய 3 புது வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்கின் முழு விவரங்களையும் பார்க்க முடியும்.
மேலும், இன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் அவற்றை பார்க்க முடியும்.
பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை ஃபீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.