ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வல்லமை கொண்டது என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு இது உதவுகிறது. உடல் எடையை குறைக்க நெல்லிக்காயை ஒன்றை பயன்படுத்தினால் போதும் என்றும் ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் இது நல்ல மருந்தாகவும் சுவையாக உணவாகவும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது என்பதும் நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும் என்றும் உடல் எடையை சீக்கிரமாக குறைக்க விரும்புவார்கள் நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.