Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்: பட்டியல் இதோ...

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்: பட்டியல் இதோ...
, வெள்ளி, 29 ஜூன் 2018 (16:40 IST)
நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளின் பட்டியல் இதோ...
 
# காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பலரது பழக்கம். ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
 
# வெள்ளரிக்காய் நீர் சத்து, ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்றாலும், இதனை வெறும் வயிற்றில் உண்பதால் வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.
 
# வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிக அளவு இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். 
 
# காலையில் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நீரழிவு வருவதற்கான காரணிகளை அதிகப்படுத்தக்கூடும். 
 
# காலை உணவாக காரசாரமான உணவுகள் உண்பதால் செரிமானத்திற்கு தொந்தரவுகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும், எனவே காரமான உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவது தவிர்ப்பது நல்லது.
 
# வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்ப்பூசணி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை வயாகரா : இது புதுசு