Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஓட்ஸை தினமும் சாப்பிடலாமா?

ஓட்ஸை தினமும் சாப்பிடலாமா?
, புதன், 11 ஏப்ரல் 2018 (13:38 IST)
ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவுப் பொருள். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரின் முதல் தேர்வாக இருப்பது ஓட்ஸ். உண்மையிலேயே ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுமா? 
 
# ஓட்ஸில் புரோட்டீன், மாங்கனீஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஈ, செலினியம், பீனோலிக் அமிலங்கள், பைட்டிக் அமிலம் போன்றவை உள்ளது. 
 
# ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். அதாவது, ஓட்ஸில் உள்ள பீட்டாக்ளுக்கன் கொழுப்பு அளவைக் குறைக்கும். 
 
# ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் க்ளுட்டமைன் போன்றவை தசை நார்களை வேகமாக உருவாக்க உதவும். 
 
# ஓட்ஸில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அரிப்பு, அழற்சி மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். 
 
# தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். உடல் எடையைக் குறைக்க செய்யும். 
 
# ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, குடலின் முறையான செயல்பாட்டை பராமரிக்க உதவும் மற்றும் அஜீரண பிரச்சனைகளை தடுக்கும்.
 
# ஓட்ஸ் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழுக்கை விழுதலை இயற்கை முறையில் தடுக்கும் வழிமுறைகள்