தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை துவங்கிவிட்டதை அடுத்து வெயில் கொளுத்தி வருகிறது என்றும் இந்த வெயில் இருந்து தப்பிக்க சில பயனுள்ள டிப்ஸ் என்னென்ன என்பதையும் தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் கோடை வெயில் கொளுத்த தொடங்கும் நிலையில் முதல்கட்டமாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். எனவே குறைந்தது மூன்று லிட்டர் முதல் நான்கு லிட்டர் வரை தினசரி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி மாம்பழம் தர்பூசணி கிர்ணி ஆகிய பழங்களை நேரடியாகவோ அல்லது ஜூஸ் மூலமாகவோ அருந்த வேண்டும்.
கோடை காலத்தை சமாளிக்க உதவும் பழங்களில் முக்கியமானது ஆரஞ்சு என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கோடை காலத்தில் எளிதாக செரிமானம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுக்கு பதிலாக தாவர உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
மேலும் கோடை காலத்தில் செயற்கையான குளிர்பானங்களை குடிப்பதை விட பழச்சாறுகளை குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.