வயிற்று வலிக்கு வாயுக்கோளாறு அல்லது அல்சர் இவைதான் காரணமாக இருக்கும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால், அப்பென்டிசைட்டிஸ் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். இதை பெற்றி தெரிந்துகொள்வோம்....
சிறுநீரக கல் ஏற்படும் போது வரும் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்குமாம்.
அப்பென்டிசைட்டிஸ் என்றால் என்ன?
அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்பு இருக்கும் அதுதான் குடல்வால் (appendix). இதில் ஏற்படும் நோய் தொற்று, தேவையில்லாத கட்டி அல்லது கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.
அப்பென்டிசைட்டிஸ் அறிகுறி:
வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளை சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும்.
அந்த பகுதியை அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரிக்கும். இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படும்.
கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படும். இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் மருத்துவம் நோயின் கடுமை அதிகமாகி குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது மருத்துவர்கலின் கூற்று.