Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூந்தல் உதிர்வதை தடுத்து பராமரிக்க ஒரு சில வழிகள் !!

Hair Problem
, வியாழன், 26 மே 2022 (10:30 IST)
பொதுவாக கூந்தல் உதிர்வதற்கு முடித்துளைகளில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். பொடுகு, அதிகபடியான எண்ணெய், வறட்சியான ஸ்கால்ப் போன்றவையே.


தலைக்கு குளிக்கும் போது மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம். ஏனெனில் அந்த வெப்பம் முடித்துளைகளில் பிடித்திருக்கும் முடிகளை வலுவிழக்கச் செய்யும். பின் முடி உதிர்தல் ஏற்படும், ஆகவே அந்த முடித்துளைகளை வலுவுடன் வைப்பதோடு, சுத்தமாகவும் வைக்க வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும்.

குளித்தவுடன் கூந்தலை துடைக்கும் போது, கவனமாக மென்மையாக துடைக்க வேண்டும். ஏனெனில் கூந்தல் ஈரமாக இருப்பதால் அந்த நேரத்தில் அதனை அழுத்தி துடைப்பதால், வலு இல்லாததால் உதிரும்.

நிறைய பேர் கூந்தலை மட்டும் நன்கு நீரில் அலசி, ஸ்காப்பை சுத்தமாக நீரில் அலச மாட்டார்கள். சொல்லப்போனால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கள் ஸ்கால்ப்பை முற்றிலும் சுத்தம் செய்யும் என்று சொல்ல முடியாது. என்ன தான் ஷாம்பு போட்டாலும், நீரில் அலசும் போது, விரல்களால் நன்கு தேய்த்து அலச வேண்டும். அவ்வாறு குளித்தால் தலை சுத்தமாவதுடன், தலையில் பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

சுடு தண்ணீரில் தலையை அலசினால் முடித்துளைகள் பாதிக்கப்படும். ஆனால் ஸ்டீம் செய்தால் தலையானது சுத்தமாகும். மாசுக்கள் அனைத்தும் தலையில் தங்கி, முடித்துளைகளை அடைத்துவிடுகின்றன. அதனால் என்ன தான் தலைக்கு எண்ணெய் தேய்த்தாலும் அந்த எண்ணெயை தலை உறிஞ்சாமல், அந்த அழுக்குகளே உறிஞ்சிவிடுகின்றன.

தலையை எவ்வளவு தான் தேய்த்து குளித்தாலும், அந்த அழுக்குகள் போகாமல் இருக்கும். அதற்கு ஒரே வழி ஸ்டீம் செய்வது தான். இதனால் தலையில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, கூந்தல் உதிர்தலும் ஏற்படாமல் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்பார்வையை சீராக வைப்பதற்கு உதவுகிறதா ஆரஞ்சு பழம் !!