தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும். தக்காளி பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.
வெயிலின் தாக்கம் காரணமாக சருமம் கருப்படைந்து காணப்படும். இதற்கு இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் தக்காளி துண்டால் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமைகள் அகலும்.
தினமும் காலையில் வெளியில் சென்று பின் மாலையில் வீட்டிற்கு வரும் போது முகத்தில் ஏகப்பட்ட அழுக்குகள் நிறைந்திருக்கும். அதற்கு நாம் சோப் பயன்படுத்துவோம். ஆனால், அப்படி செய்யும் போது நம் முகத்தில் அழுக்குகள் இருந்துகொண்டே தான் இருக்கும்.
ஒரு மாற்றத்திற்காக வீட்டிற்கு வந்ததும், சோப் பயன்படுத்தாமல், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சூசுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும்.