இன்றைக்கு ஸ்ட்ரெஸ் காரணமாக இளம் வயதிலேயே பலருக்கு முடி உதிர தொடங்குகிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் முறையான பராமரிப்பின் மூலம் முடிக்கு ஊட்டம் அளித்தாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையானவை: மீடியம் சைஸ் வெங்காயம் 5, தேன் 1/2 கப், வாசனை எண்ணெய் 10 துளிகள். தேனை அரைக் கப் அளவு எடுத்து கொள்ளுங்கள் .அதனை மிக்சியில் அரைத்து எடுக்கப்பட்ட வெங்காயச் சாறுடன் கலக்க வேண்டும். வெங்காயச் சாறுடன் தேன் நன்றாக சேரும் வரை கலக்குங்கள்.
இந்த வெங்காய-தேன் கலவையில் இறுதியாக வாசனை எண்ணெய் 10 துளிகள் சேருங்கள். வாசனை எண்ணெய் என்றால் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை: இப்போது இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஸ்கால்ப்பாக எடுத்து இந்த கலவையை தடவுங்கள். ஸ்கால்ப்பில் படும்படியே நன்றாக தடவுவது முக்கியம். மீதமுள்ள எண்ணெயை நுனி வரை பூசுங்கள்.இப்போது உங்கள் முடி முழுவதும் மற்றும் முடி உதிர்ந்து போன இடத்திலும் தடவுங்கள். அதனை அப்படியே 45 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்தால் முடி கொத்தாய் உதிர்ந்து போன இடத்த்தில் முடி வளரும்.
கறிவேப்பிலையை கொண்டே முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கறிவேப்பிலையில் இருக்கும் புரதமும், பீட்டா கரோட்டினும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
கூந்தலின் வறட்சியை தடுத்து கூந்தலை ஈரப்பதமாக வைக்க இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உதவுகின்றன. அதனால் தான் கூந்தலுக்கான தைலத்தில் கறிவேப்பிலை முதல் இடத்தில் இருக்கிறது. கூந்தலுக்கான ஹேர் பேக் பயன்பாட்டிலும் கறிவேப்பிலைக்கு தனி இடம் உண்டு. முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்துவதோடு பெருமளவு இவை இளநரை வராமலும் தடுக்கிறது.