தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.
ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கை கீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள். இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்கான காரணமாக அமைகிறது.
தலைமுடி உதிர்வதை தடுக்க 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.
முடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.
கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும்.
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.