திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று இரவு 11; 59 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி நாளை இரவு 11;33 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் என்று கூறப்படுகிறது.
இதையொட்டி இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலில் குவிய ஆரம்பித்துள்ளனர். அருணாசலேஸ்வர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச தரிசனம் மற்றும் ரூ. 50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில், செல்லும் வகையில், தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4மணி முதல் மணி நேரம் ஆகும் என்றும், விபூதி, குங்கும் வழங்க வேறு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்று கலெக்டர் முருகேஷ் கூறியுள்ளார்.