ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று உண்டு என்பதும் விசேஷ நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவார்கள் என்பதும் தெரிந்ததே.
ஆனால் ஒரு சிலர் குலதெய்வம் என்ன என்பதை தெரியாமல் இருப்பார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
குலதெய்வம் குறித்து தெரியாதவர்கள் பௌர்ணமி அன்று வீட்டில் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் வைத்து பொங்கல் வைத்து படையல் செய்ய வேண்டும்
அப்போது மஞ்சள் தூள் மூலம் பிள்ளையாரை பிடித்து அதற்கு குங்குமப்பொட்டு வைத்து கற்பூரம் ஊதுபத்தி ஏற்றி மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு தீபாரதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று மாத பௌர்ணமியில் செய்தால் குலதெய்வம் கனவில் தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது..