தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றால் 100 முறை காசி விசுவநாதர் கோயிலுக்கு சென்றதற்கு சமம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் புனிதமான தலமாக காசி கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த காசி திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் உள்ள கும்பகோணம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சாமி கோயிலுக்கு சென்றால் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்துவாக பிறந்தவர்கள் ஒரு முறையேனும் காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றும் காசியில் இறந்தால் மறுபிறவி கிடையாது என்றும் நம்பிக்கையாக உள்ளது
ஆனால் கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலுக்கு சென்றால் 100 முறை காசி கோயிலுக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கு உள்ள தீர்த்தம் காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாகவும் கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது