மகாலட்சுமி பூஜையின் போது நாம் கடந்த பிறவிகளில் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டினால், அந்த தெய்வம் நம்மை மன்னித்து நம் வாழ்க்கையில் வளம் கொண்டு வருவாள். பெண்களின் மாங்கல்யத்திற்கு ஸ்ரீ மகாலட்சுமி பூஜை மிகச் சிறந்த பரிகாரமாகும்.
மகாலட்சுமி பூஜையை எவ்வாறு செய்யலாம்?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி தேவியின் படத்தை அழகுபடுத்தி, சுத்தம் செய்ய வேண்டும். காலை நேரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் மந்திரத்தை 12 முறை அல்லது அதற்கு மேல் உச்சரிக்கலாம். பால், பழங்கள் அல்லது பாயாசத்தை நைவைத்தியமாக சமர்ப்பிக்கவும். நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை மூன்று முறை பாட வேண்டும்.
ஆடி மாதத்தில் இதே வழிபாட்டை செய்தால் அது வரலட்சுமி விரதமாகக் கருதப்படும். இந்த விரதத்தில் வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களது ஆசிகளைப் பெறுவது சிறப்பானது.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், மாங்கல்ய பாக்கியம் நிலைத்து, செல்வம் பெருகும். மண வாழ்க்கை மேம்படும், திருமணம் காணாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் உறுதியாவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு வைத்து பூஜை செய்து, அதை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் நெடுங்காலம் சுமங்கலியாக வாழ முடியும். இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு நல்ல ஞானம் வரும், செல்வ வளமும் சேரும்.