முற்பிறவி தோஷங்களை நீக்குவதற்கு நாகராஜ விரதம் இருக்க வேண்டும் என முன்னோர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
நாகராஜ விரதம் என்பது சுக்ல சஷ்டி விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல சஷ்டி தினத்தில் செய்ய வேண்டும் என்றும் இதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் நாக வடிவம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
விரதம் இருக்கும் தினத்தில் அதிகாலையில் குளித்து விநாயகரை வழிபட்டு அதன் பின் பூஜை அறையில் கலசம் அமைத்து அதை அலங்கரித்து நாக வடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் குங்குமம் திலகம் இட்டு வணங்க வேண்டும்.
பிரார்த்தனை முடிந்ததும் தேன் மற்றும் பசும்பால் கலந்த பிரசாதத்தை அனைவருக்கும் தந்து விட்டு விரதம் இருப்பவர் சாப்பிட வேண்டும். காலை மற்றும் மதியம் எந்த உணவையும் சாப்பிடாமல் மாலையில் பாம்பு புற்றுக்கு பால் ஊத்தி செய்ய வேண்டும் என்றும் அன்று இரவு சாப்பிட்டு விரத்ததை முடிக்க வேண்டும். இத்தகைய விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு முற்பிறவி தோஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்றும் கூறப்படுகிறது.