ஏழு தலைமுறைகள் உள்ள பாவம் விலக வேண்டும் என்றால் எறும்புக்கு பச்சரிசி இட வேண்டும் என காஞ்சி பெரியவர் தெரிவித்துள்ளார்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பிறப்பில் மட்டும் என்று ஏழு பிறப்பிலும் பல பாவங்கள் செய்திருப்போம்.
இந்த பாவங்களிலிருந்து விடுபட காஞ்சி பெரியவர் ஒரு எளிதான விஷயத்தை கூறியுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கைப்பிடி பச்சரிசி அளவு நன்கு பொடியாக்கி அதை எறும்புக்கு உணவாக போட்டால் ஏழு தலைமுறைகள் செய்த பாவங்கள் உடனடியாக விலகும் என்று அவர் தெரிவித்துள்ளார்
அதனால்தான் பழங்காலத்தில் அரிசியில் கோலம் போடுவார்கள் என்று அந்த கோலத்தில் உள்ள பச்சரிசியை எறும்புகள் மற்றும் பூச்சிகள் உணவாக எடுத்துக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.