நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட உள்ளதை அடுத்து கமாண்டோ பாதுகாப்பு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், 41 நாட்கள் நடை திறந்து வைத்திருக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை கட்டுப்பாடு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனையடுத்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ட்ரோன் கேமராக்கள், கமாண்டோ பாதுகாப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன