Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில்..! வழிபாட்டு முறைகள்..!

Narasimmar Temple

Raj Kumar

, வெள்ளி, 24 மே 2024 (08:46 IST)
திருவேளுக்கை ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் திரு ஸ்தலம் அமைந்துள்ளது. எனவே இது திருவேளுக்கை சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.



அவ்வளவிற்கு முக்கியமான ஸ்தலமாக இது இருப்பதற்கு காரணம் ஸ்ரீ நரசிம்ம அவதாரத்திற்கும் இந்த திருக்கோயிலுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரணியனை வதம் செய்ய பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தப்போது அது மிகவும் உக்கிரமான அவதாரமாயிற்று. இரணியனை வதம் செய்த பிறகும் கூட கோபம் தணியாத நரசிம்மரை அங்கிருந்த அசுர கூட்டம் துரத்த துவங்கியது.

அப்போது வந்த நரசிம்மன் இந்த இடத்தின் இயற்கை எழிலை கண்டு மயங்கி சாந்தமானார். அங்கேயே யோக நரசிம்மராகி அமர்ந்துவிட்டார். இதனால் இந்த தலம் நரசிம்மருக்கான முக்கியமான திருத்தலமானது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் காலை 7 முதல் 11 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணி வரையிலும் திறப்பு நேரமாக உள்ளது.

webdunia


இங்கு நடக்கும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துக்கொள்பவர்கள் நரசிம்ம ஸ்தோத்திரங்கள் செய்து வழிபட்டால் அவர்களுக்கு கிரக தோஷங்கள், பில்லி சூனியம், போன்ற கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம். அதே போல அமாவாசை தினங்களில் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதை பக்தர்கள் மீது தெளிக்கின்றனர். இதனால் சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

நரசிம்மர் சந்நிதிக்கு எதிராக ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. திருமணம் தொடர்பான தடைகள் மற்றும் பரிகாரங்களுக்கு இந்த தளத்தை நாடுகின்றனர் பக்தகோடிகள்.

நரசிம்மன் கோவில், சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில், ஜாதக தோஷம் போக்கும் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்!- இன்றைய ராசி பலன் (24.05.2024)!