இன்று ஹோலிப் பண்டிகை...நாடு முழுவதும் கோலா கொண்டாட்டம் !
சென்னை உள்பட நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பவுர்ணமியன்று கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை அதாவது வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்த ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இரணியன் தன் மகனை, சகோதரி ஹோலிகாவின் உடலை தீ எரிக்காத தன்மையைப் பயன்படுத்திக் கொல்ல முயன்றார். அதாவது பிரகலாதனை தனது சகோதரியின் மடியில் அமர வைத்து தீ மூட்டச் செய்தார். ஆனால் விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் உயிருடன் மீண்டு வந்தான். ஹோலிகா தீயில் மாண்டாள்.
தர்மம் வென்றது என்பதை வெளிக்காட்டுவதற்காக இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட புனிதமான ஹோலி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒருவர் மற்றொருவர் மீண்டு வண்ணப் பொடிகளைப் பூசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.