தமிழர்கள் உணவுகளில் சாம்பார் முக்கிய இடம் பிடிக்கிறது. சாம்பாருக்கு சுவை தருவது சாம்பார் தூள். சாம்பார் தூளை தனியாக வாங்குவதை விட வீட்டிலேயே செய்வது நல்ல ருசியையும், ஆரோக்கியத்தையும் தரும். ருசியான சாம்பார் பொடி வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: தனியா, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, வெந்தயம், வர மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயம்
முதலில் வர மிளகாயை காம்பு கிள்ளி எடுத்து கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தனியா, துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
பொன்னிறமாக வறுபட்ட உடன் அரிசி, வெந்தயம் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் அதனுடன் சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து தீயை மெதுவாக வைத்து மெல்ல கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்களை ஒரு பெரிய தட்டில் பரப்பி ஆற வைக்க வேண்டும். அதற்கு பின் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு அரைத்த சாம்பார் பொடியை காற்றுப் புகாத சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சாம்பார் பொடி ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும், நல்ல சுவையையும் தரும்.