நேற்று நடைபெற்ற போட்டியில் கேன் வில்லியம்சனின் கஷ்டமான கேட்ச்சை தேவ்தத் படிக்கல் விட்டதால் தோல்வியை தழுவினோம் எனக் கோலி கூறியுள்ளார்.
நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி 131 ரன்களுக்கு பெங்களூர் அணியைக் கட்டுப்படுத்தினர். இந்நிலையில் போட்டியின் முக்கியமானக் கட்டத்தில் கேன் வில்லியம்ஸன் தூக்கி அடித்த பந்து சிக்ஸை நோக்கி பறந்தது. அப்போது அங்கு பீல்டிங்கில் இருந்த படிக்கல் அந்த பாலை பிடித்தார். ஆனால் அவர் எல்லைக்குள் சென்றுவிடக் கூடும் என்ற பதற்றத்தில் பாலை தூக்கி எறிந்தார்.
இதனால் பந்து சிக்ஸ் ஆகாமல் ஒரு ரன் மட்டும் ஆனது. ஆனாலும் அந்த கேட்ச்சை அவர் பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறி இருந்திருக்கலாம். அதன் பின்னர் நிலைத்து நின்று விளையாடிய கேன் வில்லியம்ஸன் அரைசதம் அடித்து வெற்றி பெறவைத்தார். போட்டியின் முடிவில் இதுபற்றி பேசிய கோலி வில்லியம்சனின் கேட்ச்சை விட்டதற்கான விலையைக் கொடுத்துள்ளோம். அதை நாங்கள் பிடித்திருந்தால் போட்டி மாறியிருக்கும் எனக் கூறியுள்ளார்.