ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சி வரும் பிரபல ஷாவ்மி நிறுவனம் தனது புதிய அதிவேக எலெக்ட்ரிக் காரை உற்பத்தியை தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கார்களுக்கு நிறைய டிமாண்ட் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக பல கார் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி நிறுவனம் சீனாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.
தனது முதல் காராக எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் ஷாவ்மி தனது முதல் தயாரிப்புக்கு Xiaomi SU7 என பெயரிட்டுள்ளது. இந்த கார் போர்ஷே நிறுவனத்தின் டேகன் மாடல் கார்களுக்கு போட்டியாக அமையும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.
இந்த Xiaomi SU7 எலெக்ட்ரிக் காரில் V6 மற்றும் V6s என்ற ஷாவ்மி தயாரிப்பான இரட்டை மோட்டார்கள் எஞ்சினில் படன்படுத்தப்படுகிறது. V6 மாடல் 299 ஹெச்.பி (குதிரைத்திறன்), 400 நியூட்டன் மீட்டர் இழுவிசையைக் கொண்டது. இது 400 வோல்ட் ஆக்சிலேட்டரில் இயங்குகிறது.
அதேபோல V6s மாடல் 800 வோல்ட் ஆக்சிலேட்டரில் 75 ஹெச்.பி திறனில் இயன்ஹ்குகிறது. இது 100 நியூட்டன் மீட்டர் இழுவிசையை கொண்டுள்ளது. இந்த டூவல் மோட்டார்கள் இணைந்து 673 ஹெச்.பி திறனை வெளிப்படுத்துகின்றது. இதனால் 2.78 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ என்ற வேகத்தை கார் தொட்டு விடும்.
இந்த காரில் 101 கிலோவாட் ஹவர் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும். இதற்காக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 220 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஷாவ்மி நிறுவனம் வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் எனவும் அதன் நிர்வாக இயக்குனர் லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.
இந்த Xiaomi SU7 மாடல் கார்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.