ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் தற்போது தனது வெப்சைட்டில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழியிலேயே பொருட்களை வாங்குவதற்காக மொழியைக் கையாண்டு வருகிறது..
இந்நிலையில், இந்நிலையில் கொரொனா காலத்தில் மக்கள் கடைகளை நோக்கிக் கும்பலாகப் படையெடுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் தனது வியாபாரத்தை மக்களுக்கு நெருக்கமான மொழிகளில் கொண்டு செல்ல அமேசான் இப்போது தென்னிந்திய மொழிகளிலும் சேவைகள் வழங்கும் முடிவெடுத்து அம்மொழிகளை இணைத்துள்ளது. இது மக்களுக்கு உதவும் என அமெச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.