இந்தியாவில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஐக்கூ நிறுவனம் தற்போது ரூ.12 ஆயிரத்தில் பட்ஜெட் விலையில் iQOO Z9X 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமானது முதலே 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பல நிறுவனங்களும் போட்டிப் போட்டு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது iQOO Z9X 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
iQOO Z9X 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
6.72 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென் 1 சிப்செட்
-
ஆக்டாகோர் ப்ராசஸர்
-
ஆண்ட்ராய்டு 14, Fun Touch OS 14
-
4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்
-
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
1 டிபி வரை சப்போர்ட் செய்யும் ஹைப்ரிட் மெமரி கார்டு ஸ்லாட்
-
50 எம்பி + 2 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
-
8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
-
சைடு ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி
-
6000 mAh பேட்டரி, 44 W ப்ளாஷ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
இந்த iQOO Z9X 5G ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குகிறது. இந்த iQOO Z9X 5G ஸ்மார்ட்போன் Northern Green, Mystic Black ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. மே 21 முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிலவரம்:
-
4 GB RAM + 128 GB - ₹12,999
-
6 GB RAM + 128 GB - ₹14,999
-
8 GB RAM + 128 GB - ₹15,999
Edit by Prasanth.K