Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்

ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்
, வியாழன், 1 ஜூன் 2017 (19:03 IST)
இத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது.


 

 
இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது. இந்த உறை மற்ற ஸ்மார்ட்போன் உறைகள் போல போனை பாதுகாக்க மட்டுமல்ல; காபி மிஷினாகவும் செயல்படும்.
 
இந்த நவீன உலகத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இப்படி எந்நேரமும் பிஸியாக இருப்பவர்களுக்காக சிறப்பாக இந்த ஸ்மார்ட்போன் உறை தயாரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காபி குடிப்பவர்களுக்கு தான் இந்த ஸ்மாட்ர்போன் உறை முக்கியமாக பயன்படும்.
 
பணியில் இருக்கும் போது திடீரென காபி குடிக்க தோன்றினால் எழுந்து சென்று குடித்து வர சோம்பல் படுவார்கள் சிலர். சிலர், காபி மிஷினை எங்கே தேடி செல்வது என விட்டுவிடுவார்கள். இதுபோன்ற கவலைகள் இனி வேண்டாம்; ஸ்மார்ட்போன் உறையிலே காபி உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் உறையை வாங்கி மாட்டிக்கொண்டு, அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வழங்கப்படும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும். இந்த காப்சூல் தண்ணீரும் காபித்தூளும் கலந்து உருவாக்கப்பட்டது. பின் அதிலிருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். 
 
இந்த காபி மிஷின் ஸ்மார்ட்போன் உறையின் விலை ரூ.3,600க்கு விற்கப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த் உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் அணியில் முதல் விக்கெட் அவுட்: எம்எல்ஏ சரவணன் மீண்டும் தினகரன் அணிக்கு தாவினார்?