ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் முறையான ஆவணங்கள் வழங்காத பயனர்களின் சேவைத் துண்டிக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளது.
குறுகிய காலகட்டத்தில் இந்தியா முழுக்கப் பரிபலமான ஜியோ மக்களுக்கு இலவச சேவைகளை முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கி வருகிறது.
பயனர்கள்:
தற்சமயம் வரை சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜியோ சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வெரிஃபிகேஷன்:
முறையான சான்றுகளை வழங்காத பயனர்களுக்கு ஏற்கனவே ஜியோ சார்பில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
வெரிஃபிகேஷன் மேற்கொள்ளாத பயனர்களுக்கு ஜியோ சேவைகள் விரைவில் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
ஆதார் கார்டு எண் மூலம் பயனர்களுக்கு ஜியோ சிம் கார்டு வழங்கப்படுகிறது. பின்னர், ரிலையன்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகை மூலம் சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
பெரும்பாலான பயனர்கள் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி ஜியோ சிம் வாங்கிவிட்டனர் என்றாலும், பலர் இன்னும் வெரிஃபிகேஷன் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என ஜியோ தெரிவித்துள்ளது.
தற்சமயம் வரை வெரிஃபிகேஷன் செய்யாதவர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் வெரிஃபிகேஷன் செய்வோர் தொடர்ந்து ஜியோ சேவைகளைப் பயன்படுத்த முடியும். அவ்வாறு செய்யாவிட்டால் சேவை நிறுத்தப்படும்.