உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் செயலியில் சாட்-களை லாக் செய்து வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் வாட்ஸப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட செய்தி அனுப்புதல், போட்டோ, வீடியோ, ஆவணங்கள் பகிர்தல், குழு விவாதம், வீடியோ கால், பணம் செலுத்துதல் என பல வசதிகளை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது தனிநபருடனான சாட்டிங்கை லாக் செய்து வைத்துக் கொள்ளும் வசதியையும் வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸப்பில் எந்தெந்த நபர்களுடன் பேசுவதை யாரும் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறோமோ அந்த நபரின் சாட்டை லாக் செய்து கொள்ளலாம். லாக் செய்த நபர் மெசேஜ் அனுப்பினாலும் Notification ல் காட்டாது. Fingerprint அல்லது பாஸ்வேர்ட் கொண்டே அந்த சாட்டை அன்லாக் செய்ய முடியும் என்பதால் வேறு யாரும் அந்த நபருடனான சாட்டை பார்க்கவும் முடியாது.
இது வாட்ஸப் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.