கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் கான்கிரீட் வாகனத்தில் பயணித்து சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 39 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் ஊரடங்கால் வருவாய் இழந்த மக்களுக்கு மத்திய அரசு முதல் மார்ச் 25 ஆம் தேதி முதல் வெளிமாநில தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் போலீசார் சட்டவிரோதமாக 18 தொழிலாளர்கள் கான்கிரிட் வாகனத்தில் சென்றது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கான்கிரீட் மிக்சர் டிரக் வந்தது. போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் உள்றவே வாகனத்தை சோதனை செய்ததில் கான்கிரிட் கலக்கும் எந்திரத்தில் 18 பேர் இருந்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.