Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வழி பாட்டு தலங்களில் ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்-பொன். இராதாகிருஷ்ணன்!

வழி பாட்டு தலங்களில் ஒரு  குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்-பொன். இராதாகிருஷ்ணன்!

J.Durai

நாகர்கோவில் , சனி, 30 மார்ச் 2024 (12:12 IST)
நாகர்கோவில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில். பொன். இராதாகிருஷ்ணன்,செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது....
 
வாக்கு பதிவுக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால்,இரண்டு நாட்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம்  பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளோம்.
 
கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மே. 2-ம் தேதி குமரியில் பாஜகவுக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
 
வரும் மே 5-ம்தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா,தக்கலை பகுதியில் மாலை 5-மணிக்கு ரோட்ஷோவில் பங்கேற்கிறார்.
 
குமரியில் எந்த மத வழிபாட்டுத் தலங்களிலும்,ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவிப்பதை தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
 
முன்னொரு சமயத்தில் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிகளில் நான் கிறிஸ்தவ மதம் பற்றி பேசிய, பேச்சின் சில பகுதிகளை எடிட் செய்து,கடந்த தேர்தலிலும், இப்போதும் சமூக வலைத்தளங்களில்  பரப்பும் அநாகரிகமான செயலை கண்டிக்கிறேன்.
 
நடைபெறும் தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்குரிய தேர்தல் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பாஜகவின் பொருளாளர் முத்துராமன், மீனாதேவ்,ஆகியோர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு அலர்ட்..! தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்..!!