Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு..! 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர்..! ராதாகிருஷ்ணன்..!!

Radhakrishnan

Senthil Velan

, சனி, 20 ஏப்ரல் 2024 (10:41 IST)
நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
 
கட்டுப்பாட்டு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும் என்ற ராதாகிருஷ்ணன், ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும் என்று குறிப்பிட்டார். 
 
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது என்றும் நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 
நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர் என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது என்று ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடு பிடிக்கும் 2-ஆம் கட்ட தேர்தல்..! கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்..!