நாளை முதல் தொடர்ந்து 18 நாட்களுக்கு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.
இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 20 தொகுதிகள் தவிர மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக போட்டியிடும் தொகுதிகள் முறையே 1. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஆகும். இதற்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறன்று வெளியானது.
இதையடுத்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது சுற்ற்ப்பயண விவரம் பின்வருமாறு:-
மார்ச் 20 – திருவாரூர், நாகை, தஞ்சை,
மார்ச் 21 – பெரம்பலூர், 22 –சேலம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி,
மார்ச் 23 – தருமபுரி, அரூர், திருவண்ணாமலை,
மார்ச் 24 – வட சென்னை,பெரம்பூர்,
மார்ச் 25 – காஞ்சிபுரம், திருப்போரூர், திருவள்ளூர், பூந்தமல்லி,
மார்ச் 26– திண்டுக்கல், நிலக்கோட்டை,
மார்ச் 27 – தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி,
மார்ச் 28 – மதுரை, விருதுநகர், சாத்தூர்,
மார்ச் 29 – சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி,
மார்ச் 30 – கிருஷ்ணகிரி, ஓசூர்,
மார்ச் 31 – வேலூர், ஆம்பூர், குடியாத்தம்,
ஏப்ரல் 1 – அரக்கோணம், சோளிங்கர், தென் சென்னை,
ஏப்ரல் 2 - நீலகிரி,
ஏப்ரல் 3 – திருப்பூர், கோவை,
ஏப்ரல் 4 – பொள்ளாச்சி, ஈரோடு,
ஏப்ரல் 5 – கரூர், கள்ளக்குறிச்சி,
ஏப்ரல் 6 – விழுப்புரம், ஆரணி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் செல்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன