காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிந்தது.
நேற்று பங்குத்தந்தை 1,300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் விழுந்ததால் ஏராளமான கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் ஓரளவு உயர்ந்தது. இன்று பங்கு சந்தை தொடங்கிய உடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து இருநூறு என்ற புள்ளியில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 160 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16856 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் இன்று பங்கு சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது என்றும், அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிந்தது.
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 998 புள்ளிகள் அதிகரித்து 56,567 புள்ளிகளை தொட்டு இருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சரிய தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 புள்ளிகள் குறைந்து 55,630 புள்ளிகளானது.