மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று சுமார் 700 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
சற்றுமுன்னர் மும்பை பங்குச் சந்தையின் பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சஸ் 40 புள்ளிகள் குறைந்து 56728 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை 8 புள்ளிகள் குறைந்து 17535 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று 700 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 20 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்தாலும் தொடர்ச்சியாக 2வது நாளாக சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இருப்பினும் இன்று மாலைக்குள் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.