இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 61,010 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி சுமார் 90 புள்ளிகள் சரிந்து 18,205 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்புகள் அமைப்ப இருப்பதாக பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்